முகப்பு
தமிழ்நாடு

மியான்மரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவதாகவும், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருவதாகவும், மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளைச் செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் முல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்குத் திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமர் அவசர தலையீட்டைக் கோருவதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →