தமிழ்நாடு

‘போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்’: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

DIN

நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுந்தர டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா என பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் போண்டா மணி. இவர் கடந்த சில தினங்களாக உடல்நல சிக்கல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதயப் பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்றுவரும் போண்டா மணி மருத்துவ சிகிச்சைக்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து தனக்கு மருத்துவ உதவி வழங்க தமிழ்நாடு அரசிடம் அவர் கோரியிருந்தார். 

இந்நிலையில் வியாழக்கிழமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போண்டா மணிக்கு தேவையான சிகிச்சைக்கான மருத்துவ செலவை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT