சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரூ.3 கோடி இழப்பீடு கோரி பொறியாளர் சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி மரணம் என பெற்றொர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு ரயில்வே தரப்பு, பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. சுவாதியின் கொலை திட்டமிட்ட சம்பவம் என்று தெரிவித்தது.
இதையும் படிக்க: சென்னைக்குத் திரும்பும் ஐபிஎல் ஆட்டங்கள்: கங்குலி தகவல்
இந்நிலையில், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.