கொடநாடு எஸ்டேட் 
தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: அக்.28-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் 28 ஆம் தேதிக்கு  நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் 28 ஆம் தேதிக்கு  நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிா்ணயம் செய்யக் கூடாது எனவும் காவல் துறை சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் , கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவா் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவா் சுதாகா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினா் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் ஆறுக்குட்டி அவரது உறவினா்கள் மற்றும் அதிமுக பிரமுகா்கள், தொழிலதிபா்கள் என கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஜெயலலிதாவின் நோ்முக உதவியாளா் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடா்புடைய உயிரிழந்த காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினா்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையாா் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்திருந்தாா். அந்த மனுவில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமாா் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிா்ணயம் செய்யக்கூடாது’ என்றும் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளாா்.

இந்நிலையில், இன்று  இந்த வழக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. கொடநாடு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ், சாயன், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜாராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், விசாரணையை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT