கோப்புப்படம் 
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு

நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். தபால், நேரடியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கட்டுநர் பணியிடத்துக்கு பள்ளி இறுதி வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், அரசு பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு விதிகளை முறையாக கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT