முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2022 at 4:53 PM
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தோ்தல் நடைபெறவுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு நாளான பிப்.19ஆம் தேதி வழக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளப் பிடித்தம், சம்பள குறைப்பு இருக்கக்கூடாது. உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீத நடடிவக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நாளான 19-ம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.