முகப்பு
தமிழ்நாடு

ஜன. 14-18 வரை வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை  என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2022 at 9:09 PM
பகிர்:

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை  என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.10) ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

அதன்படி வரும் 16-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். 

ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.