முகப்பு
தமிழ்நாடு

50 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:


தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

வாரந்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 18 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 88 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 65 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், 19-வது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.