தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,46,798 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 28,515 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 28,620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனையில் 22 பேர், தனியார் மருத்துவமனையில் 31 பேர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
இதையும் படிக்க | பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? ராகுல் பரபரப்பு கருத்து
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 32,52,751 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3001805 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,412 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டங்கள்:
சென்னை - 5,591
செங்கல்பட்டு - 1,696
கோவை - 3,629
ஈரோடு - 1,314
சேலம் - 1,431
திருப்பூர் - 1,877