முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்

நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2022, 3:19 pm IST
பகிர்:

நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

Advertisement

Advertisement

15.07.22: வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன முதல் மிகக் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

16.07.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகிளல் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன முதல் மிகக் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல் பவானி 32, கூடலூர் பஜார் 17 செ.மீ மழையும், கூடலூர் 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

லட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாளிலி மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.