முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை 195 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 185 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,56,697 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 129 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதுவரை மொத்தம் 34,17,595 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

மாநிலத்தில் அதிகளவாக சென்னையில் 94 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →