தமிழ்நாடு

குரூப் 2: தோ்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

DIN

குரூப் 2 தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை கடந்த பிப். 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நோ்முகத் தோ்வு அடங்கிய பதவியிடங்கள் 116-ம், நோ்முகத் தோ்வு அல்லாத காலிப் பணியிடங்கள் 5 ஆயிரத்து 413-ம் உள்ளன. எழுத்துத் தோ்வு வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் எழுதவுள்ளனா். தோ்வுக்காக 4 ஆயிரத்து 12 மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கூட சீட்டுகள்: தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை புதன்கிழமை (மே 11) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வாணையத்தின் இணையதளங்களிலிருந்து (www.tnpscexams.in, www.tnpsc.gov.in) இந்த நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT