முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கமாக திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை இதுநாள் வரை பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாகவே வழங்க இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும். இதர மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.