குடியாத்தம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடியன் பட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடியன் பட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
இதனிடையே இவர் நேற்று இரவு குடும்ப பிரச்னை காரணமாக அதே பகுதியில் உள்ள குட்டையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ரீட்டா ( 22) என்பவர் அஜித் குமாரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து, அவரும் இரவு அவரின் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: சேலம் மாவட்டத்தில் ரயில் விபத்து தவிர்ப்பு
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.