அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி, கர்நாடகத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் வழங்கியது.
அதுபோல, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த இபிஎஸ்ஸுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்: அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்