தங்கம் விலை சற்று குறைந்தது: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, ஏப்.20-ஆம் தேதியான இன்று ஒரு சவரன் ரூ.120 குறைந்து சவரனுக்கு ரூ.45,200-க்கும், ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.81-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.