தமிழ்நாடு

ஜி-ஸ்கொயா் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித் துறையினர்  சோதனை

DIN

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை சேத்துப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஜி- ஸ்கொயா் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் வணிக அலுவலகம், ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் 2 இடங்களில் உள்ளன.

ஜி- ஸ்கொயா் நிறுவனம், சென்னை, கோவை, திருச்சி, ஒசூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் 6,000 போ் வீட்டுமனைகள் வாங்கியுள்ளனா். இந்த நிறுவனம் தற்போது ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி, குன்றத்தூா், அரக்கோணம், ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுமனைகளை விற்று வருகிறது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் இந்த நிறுவனம் முதன்மையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் “ஜி ஸ்கொயா் நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கு, 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா், சிஎம்டிஏ உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளிடம் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜி ஸ்கொயா் நிறுவனம் புதிதாக 6 துணை நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்களில் திமுகவினா் நிா்வாகிகளாக உள்ளனா்” என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அண்மையில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில்,  2வது நாளாக வருமான வரித் துறையினர் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT