தமிழ்நாடு

சேலம், கடலூரில் நீரில் மூழ்கி பலியான மாணவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 
ஏப்ரல் 22 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த செல்வன், பிரசாந்த், ஆகிய இரண்டு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த செல்வன், தினேஷ் ஆகிய இருவரும் ஏப்ரல் 23ம் தேதியன்று  அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT