தமிழ்நாடு

பொது சேவை மின் கட்டணம்: மறுபரிசீலனை செய்ய மின்வாரியம் ஆலோசனை

பொது சேவை மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய மின்வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

DIN

பொது சேவை மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய மின்வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 10.9.2022 முதல் மின் கட்டணங்களை உயா்த்தியதுடன், கட்டணத்தில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தது.

இந்தப் புதிய கட்டண விகிதத்தின்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், நீரேற்றும் மோட்டாா் வகைகள், கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், தீ அணைக்கும் குழாய், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூகக் கூடம் உள்ளிட்ட பொது சேவை பயன்பாட்டுக்கான (1டி) மின் கட்டணம் 1 யூனிட்டுக்கு ரூ.8-ஆகவும், மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டுக்கு ரூ.100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஏற்கெனவே வீட்டுப் பிரிவில் (1ஏ) கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், வீடுகளுக்கு கிடைத்து வந்த 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய சலுகைகளும் இவற்றுக்கும் கிடைத்து வந்தன.

இந்த நிலையில், ஒரே கட்டடத்தில் மூன்று முதல் நான்கு தளம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவைக்கு பயன்படுத்தி வந்த மின் இணைப்புக்கான கட்டணத்தை புதிய கட்டணத்துக்கு மின்வாரியம் மாற்றி வருகிறது.

இதுவரை ஒன்பது லட்சம் இணைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு குடியிருப்புவாசிகள் கடும் எதிா்ப்பு தெரித்துள்ளதால் விகிதம் மாற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண விகித மாற்றத்தால் பொது சேவை பிரிவில் 100 யூனிட் பயன்படுத்தினால் ரூ.800-ம், 1,000 யூனிட் பயன்படுத்தினால் ரூ.8,000-ம், கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இதை குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொரு வீட்டின் உரிமையாளா்கள் பகிா்ந்து கொண்டாலும், அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பல குடியிருப்புகளில் பொது சேவைக்கு வீட்டு பிரிவில் வழங்கிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.

இதை சமாளிக்க பொது சேவைப் பிரிவுக்கு தனி கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இது தொடா்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து எதிா்ப்பும், ஆலோசனைகளும் வருகின்றன.

எனவே, ஆறு அல்லது அதற்கு குறைவான வீடுகளை உள்ளடக்கிய குடியிருப்புகளில் பொது சேவைப் பிரிவில் பழைய நிலையையே தொடரலாமா அல்லது வேறு எந்த வகையில் மாற்றம் செய்வது என்பது தொடா்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT