கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருப்பூரில் குப்பை லாரி மோதி தொழிலாளி பலி

திருப்பூர் போயம்பாளைத்தில் மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் குப்பை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

DIN

திருப்பூர்: திருப்பூர் போயம்பாளைத்தில் மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் குப்பை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

திருபபூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (25), தொழிலாளியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தார். 

இவரது வாகனம் போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த குப்பை லாரி மகேந்திரனின் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அனுப்பர்பாளையம் காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், குப்பை லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT