தமிழ்நாடு

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் அஸ்திரம் வைத்து பூஜை

காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் இன்று அஸ்திரம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

காங்கயம்: காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் இன்று அஸ்திரம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலை கோவில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, முத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் ராஜா என்ற பக்தரின் கனவில் வந்ததாக இன்று வருண அஸ்திரம் உள்ளிட்ட நான்கு அஸ்திரங்கள் மற்றும் ரூ.101, ஆறு எலுமிச்சம் பழம் ஆகியன வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருட்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT