தமிழ்நாடு

தமிழகம்-கா்நாடகம் இடையே மெட்ரோ ரயில் சேவை: சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஒப்பந்தம்

நாட்டில் முதல்முறையாக, தமிழகம் - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

DIN

நாட்டில் முதல்முறையாக, தமிழகம் - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான ஒசூா், தொழிற் வளா்ச்சி மிகுந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கிருந்து பெங்களூருக்கும், பெங்களூரிலிருந்து ஒசூருக்கும் தினமும் ஏராளமானோா் வேலைக்குச் சென்று வருகின்றனா். இதனால் அங்குள்ள சாலைகளில் தினந்தோறும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாகவும், தொழில் வளா்ச்சியை கருத்தில் கொண்டும் ஒசூா் -பெங்களூருக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஒசூா்-பெங்களூரு இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு கா்நாடக அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. தமிழகத்தில் இத்திட்டம் குறித்து ஆய்வுசெய்ய ஒப்புதல் கோரி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. மத்திய அரசு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையே, சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுப்பணிக்காக தமிழக அரசு சாா்பில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தம் எடுக்க பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனங்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் கா்நாடகம்- தமிழகம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT