தமிழ்நாடு

செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

விழுப்புரம்: செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்பும் மாவட்டம் வானூர் வட்டம், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தங்கள் கிராமத்துக்கு செம்மண் குவாரி தேவையில்லை என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், செம்மன் குவாரி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்குப் பதியப்படுள்ளது. எனவே செம்மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரியும், 23 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து  காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்து, பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT