முகப்பு
தமிழ்நாடு

இலுப்பூர் அருகே முதியவர் அடித்துக் கொலை!

இலுப்பூர் அருகே முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

விராலிமலை: இலுப்பூர் அருகே முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணா கோயில்பட்டியைச்  சேர்ந்தவர்  கணேசன்( 59), இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கரோனா தாக்குதலுக்கு பின் மனைவி மகன்களை சென்னையில் விட்டுவிட்டு தனது சொந்த ஊரான திருவண்ணா கோயில்பட்டிக்கு வந்து கோயில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டில் முன் அமர்ந்திருந்த இவரை இன்று அதிகாலை வாகனத்தில் வந்த சிலர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி அடித்து கொன்று விட்டு தப்பியுள்ளனர்.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. முகம் சிதைந்த நிலையில் கிடக்கும் கணேசன் கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.