பழனிச்சாமி - சீதா 
தமிழ்நாடு

சேலம்: குடும்பத் தகராறால் கணவன் - மனைவி தற்கொலை!

சேலம் போடிநாயக்கன்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சேலம் போடிநாயக்கன்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் சூரமங்கலம்  அருகே போடிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் மூலக்காடு பகுதி உள்ளது. இந்த இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35), இவரது மனைவி சீதா (வயது 32), இவர்களுக்கு லோக பிரியா (14 வயது) என்ற மகளும், கௌதம் (11 வயது) என்ற மகனும் உள்ளனர், லோக பிரியா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கௌதம் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

பழனிச்சாமி - சீதா ஆகிய இருவரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போலவே நேற்று மாலையும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள  கிணற்றில் விழுவதற்காக மனைவி சென்றார். இதனை அடுத்து பழனிச்சாமியும் கிணற்றில் விழ சென்றார். சம்பவம் அறிந்த அப்பகுதியினர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

சிறிது நேரம் கழித்து இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். 

சம்பவம் அறிந்த சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் நிலவழகன், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது சூரமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இருவரையும் மீட்டனர். 

இதனை அடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT