தமிழ்நாடு

அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவு

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

DIN

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், அதிமுக மாநாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகர்ஜூன், சட்டம் – ஒழுங்கு பிரச்னை மற்றும் போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ்.பி உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT