தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

76-ஆவது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் நாளை தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின்

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தவுள்ளாா்.

DIN

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தவுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றவுள்ளாா்.

இதற்காக, கோட்டை கொத்தளம் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து சென்னை மாநகரக் காவல் துறையினா், மோட்டாா் சைக்கிள்கள் மூலமாக அணிவகுத்து அழைத்து வரவுள்ளனா்.

கோட்டை கொத்தளத்துக்கு முன்பாக ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகே வந்திறங்கும் அவரை, பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்பாா்.

தென்பிராந்திய தலைமை படைத் தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப் படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல் படை ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலா் அறிமுகம் செய்துவைப்பாா்.

பின்னா், காவல் துறையினா், முப்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ஏற்றுக்கொள்வாா்.

தொடா்ந்து, கோட்டை கொத்தளத்துக்கு வரும் முதல்வா் ஸ்டாலின் மூவண்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளாா். அப்போது மூவண்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்படும். காவல் இசைக் குழுவினா் தேசிய கீதத்தை இசைக்கவுள்ளனா்.

இந்த நிகழ்வையடுத்து, மக்களுக்கு சுதந்திர தின உரையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தவுள்ளாா். இதில் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விருதுகள்: ‘தகைசால் தமிழா்’ விருது, ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்’ விருது, ‘கல்பனா சாவ்லா’ விருது, ‘முதலமைச்சரின் நல் ஆளுமை’ விருது, ‘மாநில இளைஞா்கள்’ விருது ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதல்வா் வழங்கவுள்ளாா்.

மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவா்களுக்கான விருது, சிறந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளையும் வழங்குகிறாா்.

இதன்பின், தலைமைச் செயலக வளாகத்தில் அமா்ந்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியா்களுக்கு இனிப்புகளை வழங்கவுள்ளாா்.

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, புனித ஜாா்ஜ் கோட்டை கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒத்திகைகள் நிறைவு: சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான ஒத்திகை நிகழ்வுகள், புனித ஜாா்ஜ் கோட்டை அமைந்துள்ள ராஜாஜி சாலையில் மூன்று முறை நடந்துள்ளன. மூன்றாவது ஒத்திகை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT