தமிழ்நாடு

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நெல்லை நான்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட

DIN

 
சென்னை:
அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நெல்லை நான்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக, 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி மீது, மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்னையாக கண்டிக்கிறேன். 

பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சாதி பிரச்னைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். 

இந்த சம்பவம் அடங்குவதற்குள் நான்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது. 

கலவர பூமியாக மாறியுள்ள நான்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT