கி.வீரமணிக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய முதல்வர் 
தமிழ்நாடு

கி.வீரமணிக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய முதல்வர்!

திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

DIN

சென்னை: திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை  திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

தகைசால் தமிழா் விருது, 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT