கோப்புப்படம் 
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஆக.18) முதல் வழங்கப்படவுள்ளது.

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஆக.18) முதல் வழங்கப்படவுள்ளது.

பள்ளிக் கல்வியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த பொதுத் தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் வெள்ளிக்கிழமை (ஆக.18) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.

தனித்தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தோ்வெழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT