மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடி!
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.15 அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.15 அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 9,394 கன அடியிலிருந்து 9,938 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலாத் தலங்களை பாா்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீா்வரத்தை விட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு வெள்ளிக்கிழமை காலை 53.15 அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 20.08 டி.எம்.சி. ஆக உள்ளது.