நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் 
தமிழ்நாடு

நீட் தேர்வு: மதுரையில் திமுக உண்ணாவிரதம் மீண்டும் தேதி மாற்றம்!

மதுரையில் நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் ஆக. 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

DIN

மதுரையில் நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் ஆக. 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆக. 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

மதுரையில் அன்றைய தினம் அதிமுக மாநாடு நடைபெற்றதால் சட்டம்-ஒழுங்கு நிலவரம் கருதி மதுரையில் மட்டும் நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு ஆக. 23 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதுரை மாவட்ட திமுக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT