முகப்பு
தமிழ்நாடு

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி: முதல்வர் இரங்கல், ரூ.5 லட்சம் நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைவிபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:



சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைவிபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை (ஆக 23) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (33), சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். 

இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து
வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →