ஆளுநர் - மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீர் ரத்து ஏன்?
ஆளுநர் - கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது, ஆளுநர் - கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அவர் சென்ற விமானத்தில் விமானிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கோவை செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்திலிருந்து ஆர்.என். ரவி, பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந் நிலையில், பெரியார் அரங்கத்தில் நடைபெறவிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.