பள்ளிக் குழந்தைகளுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ். 
தமிழ்நாடு

வெள்ளக்கோவில் அருகே காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார் 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தமிழக அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தமிழக அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.

முத்தூர்

முத்தூர் சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. லட்சுமணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இந்த திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் இந்த பகுதியில் திட்டத்தைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். 

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1,081 அரசு தொடக்கப்  பள்ளிகளில் 75,482 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள்.

நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 2 படங்கள்!

SCROLL FOR NEXT