விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகிறாா். அங்கு கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்திக்கிறாா்.
மேலும், விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறாா். இந்த ஆண்டும் கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்க உள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,
தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.