தமிழ்நாடு

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு தொடங்கியது!

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்ளுக்கு எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 45 இடங்களில் இன்று (ஆக. 26) தொடங்கியது.

DIN

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்ளுக்கு எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 45 இடங்களில் இன்று (ஆக. 26) தொடங்கியது.

காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இந்த எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

இத் தோ்வை 1,45,804 இளைஞா்கள், 40,885 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 1,86,722 போ் எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களில் 13,609 ஆண் காவலா்கள், 2,401 பெண் காவலா்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 16,011 பேருக்கும் தோ்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வறைக்குள் கைப்பை, செல்போன் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT