மதுரை ரயில் விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுமதுரை ரயில் விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னௌவில் இருந்து தென் மாநிலங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலில் 180 பயணிகள் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர்.
இவர்கள் வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயில் பெட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் டீ, சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு ராஜாஜி மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்கவும், இறந்தவர்களின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லும் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.