தமிழ்நாடு

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக: அமைச்சர் சேகர் பாபு 

DIN

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயிலில் ஆய்வு செய்த பின் அவர் அளித்த பேட்டியில், திராவிட மாடல் ஆட்சியில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 2 ஆண்டுகளில் 1,922 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. அனுபாவி சுப்பிரமணியர் கோயிலில் ரோப் கார் வசதி அமைக்க சாத்திய கூறு உள்ளது.

ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும். 

5,135 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான 5,335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பக்தர்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பேரூர் கோயில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் அறங்காவலர் குழு அமைக்கப்படும்.

ஆதீனங்கள் ஆட்சியாளர்களை தேடி சென்ற காலம் போய், இப்போது ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்றோம். திமுக இந்துக்களுக்கு எதிரான சட்சியல்ல, இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT