சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல்-தாய் ரமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன். 
தமிழ்நாடு

சந்திரயான்-3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் நேரில் வாழ்த்து

சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

DIN


விழுப்புரம்: சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

உலக நாடுகளே இந்தியாவை வியந்து பாா்க்கும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்- 3 திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளனா். சந்திரயான்- 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விழுப்புரத்தைச் சோ்ந்த பி.வீரமுத்துவேல்.

இந்த நிலையில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலிடம் தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவுக்கு பெருமை கிட்டியுள்ளது. அதில், தங்கள் மகனின் பங்கு அளப்பரியது என்று அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தி வருகின்றனர்.

வீரமுத்துவேலிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியபோதுகூட, தமிழகத்துக்கு வரும்போது நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளாா். 

இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல்-தாய் ரமணி ஆகியோரை  நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

அப்போது, நாட்டிற்கு பெருமைத் தேடி தந்த மகனை பெற்ற நீங்கள் நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக சத்தியநாராயணன் தெரிவித்தார். அப்போது, ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT