தமிழ்நாடு

அவிநாசி: விபத்துகளை தடுக்க சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க கோரிக்கை

DIN

அவிநாசி: அவிநாசி நகரப் பகுதிகளில் விபத்துகளை தடுக்க சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம்,  பேரூராட்சி நிர்வாகத்திடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 

அவிநாசி நகர வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் ஒவ்வொரு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகளின் முன் பகுதியில் நடைபாதைகளில் நடப்பதற்க்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடையூராக புதிதாக கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.  சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து உருவாகியுள்ள கடைகளால் பெரும் விபத்து, பல உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.  மேலும் சாலை ஓரமாக நடக்க வேண்டிய பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளால், சாலை நடுவே செல்லும் வாகனங்களை ஒட்டி நடக்கின்றன. 

ஆகவே சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT