முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்  3,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்  3,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

முன்னதாக 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 3,000 கன  அடி நீர் திறக்கப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு அதிகரித்து வருவதால், ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்து வருகிறது.

தற்போது ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 24 அடியில் 22.69 அடியாகவும் கொள்ளளவு 3,038 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →