தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 செமீ-க்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதி கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தீவிர புயலாக நகர்ந்து வருகிறது.

தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 280 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT