தமிழ்நாடு

நாளை(டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

DIN


சென்னை: புயல் காரணமாக,சென்னையில் புறநகர் ரயில்கள் திங்கள்கிழமை (டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது.மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து,வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே திங்கள்கழமை(டிச.4)கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4-ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புயல் காரணமாக, சென்னையில் புறநகர் ரயில்கள் திங்கள்கிழமை(டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT