தமிழ்நாடு

புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்: தீவுப்போல காட்சியளிக்கும் குடியிருப்புகள்!

DIN

புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், புழல் ஏரியில் இருந்து 4,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் இருந்து வெளியாகும் உபரி நீரால், செங்குன்றம் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகள் தீவுப்போல காட்சியளிக்கிறது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வரை மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT