தமிழ்நாடு

பிச்சாட்டூர் அணையிலிருந்து  500 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

DIN

திருவள்ளூர்: மிக்ஜம் புயலால் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணை நிரம்பியதால் திங்கள்கிழமை ஆரணியாற்றில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி ஆறு வடிநில கோட்டம் சார்பில் ஆட்சியர் த.பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

ஆந்திரம் மாநிலம் சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட அளவு 281 அடியாகும்.அதனால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 278.10 அடியாக உள்ளது.

இந்த நிலையில் மிக்ஜம் என்ற பெரும் புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டணம் கடற்கரைக்கு இடையில் கடக்க உள்ளது.அதனால் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அதனால், நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநில அரசு திங்கள்கிழமை 500 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.இந்த நீரை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கள் மற்றும் தடுப்பணைகளில் சேமித்து ஏரிகளுக்கு வரத்துக்கால்வாய் மூலம் அனுப்பி பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு மழை நீர் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே,ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், ஆர்.என்.கண்டிகை, மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமியாபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், பிளயம்பாக்கம், போளாச்சியம்மன்குளம், அனந்தேரி,  பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மாளாந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைபட்டு, பெரியபாளையம், ராளப்பாடி,  ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூர், வைரவன்குப்பம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூர், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, காட்டூர், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம், தாங்கள்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அவர் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT