முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் காலை 8.30 மணி வரை அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று(டிச.4) காலை 8.30 மணி வரை அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று(டிச.4) காலை 8.30 மணி வரை அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் ’சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(டிச.4) காலை 8.30 மணி வரை, பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் இடி மின்னல்  ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அண்ணாநகர், மடிப்பாக்கம், பெரம்பூர், தி.நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் நகரின்  பிற பகுதிகளிலும், இன்று (டிச.4) அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →