முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

Updated On : 4 டிசம்பர், 2023 at 4:40 PM
கோப்புப்படம்
பகிர்:

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி மிக்ஜம் புயல் கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.