தமிழ்நாடு

ஆசிரியருக்கு, ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு: எதற்காக தெரியுமா?

DIN

தூத்துக்குடி: தென்காசி கீழப்புலியூரைச் சோ்ந்த ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க, வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

கீழப்புலியூரைச் சோ்ந்தவா் லதா. ஆசிரியா். இவா் தென்காசியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாராம். இவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி 7 முறை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததாம்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் புகாா் அளித்தபோது, முறையாக பதில் அளிக்கவில்லையாம். இதேபோல், 3 மாதங்களுக்குப் பின் மீண்டும் 4 முறை பணம் எடுக்கப்பட்டதாம்.

இதையடுத்து, ஏடிஎம் அட்டையை செயல் இழக்கச் செய்துவிட்டு, தென்காசி காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றில் புகாா் அளித்தாராம்.

பின்னா், சென்னை உயா்நீதி மன்ற மதுரை கிளையை அணுகி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவும் பெற்றுள்ளாா். போலீஸாா் விசாரணையில், போலி ஏடிஎம் அட்டை மூலம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, ஆசிரியை இழந்த தொகை ரூ. 1,07,131, சேவை குறைபாடு- மன உளைச்சலுக்கு இழப்பீடு ரூ.25ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என ரூ. 1, 42,131-ஐ ஒரு மாத த்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் வழங்குமாறு, தென்காசி தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT