தமிழ்நாடு

டிபி புகைப்படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்: இது அடுத்த மோசடி

புதிய எண்களில் இருக்கும் டிபி புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் டிபி புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில், இந்த 2023ஆம் ஆண்டில் நடந்த அதிகபட்ச சைபர் குற்றங்கள் சென்னையில்தான் பதிவாகியிருப்பதாகவும், அடுத்த இடங்களில் தாம்பரமும் ஆவடியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, தமிழகத்தில் பதிவான ஒட்டுமொத்த சைபர் குற்றங்களில் 21 சதவீத குற்றங்கள் சென்னை மாநகரத்திலிருந்து பதிவாகியிருக்கிறது. சைபர் குற்றங்கள் நடந்தால் 1930 தொலைபேசி எண்ணில் அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அசோக் நகரில் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு 2,32,000 பேர் இந்த ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதுமிருந்து அழைத்து புகார்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 30000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள் 6,500 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் தாம்பரம் 3000 வழக்குகளுடனும், ஆவடி 2,200 வழக்குகளுடனும் உள்ளன. சென்னையில் சைபர் கிரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணம் துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணமாக எடுக்கப்படுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், சைபர் கிரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை திரும்பப் பெறுவதும் கடினம் என்கிறார்கள்.

ஒரு மோசடி இப்படி நடக்கிறது என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுமே, மோசடியாளர்கள் புதிய வகையான மோசடியை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சில மோசடியாளர்கள், வாட்ஸ்ஆப் டிஸ்ப்ளே பிக்சர்களை திருடி அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. புதிய செல்போன் எண்களிலிருந்து அழைப்பு வரும்போது, வெறும் டிஸ்ப்ளே பிக்சரை வைத்து அந்த எண் அவர்களுடையது என யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

சென்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு இரண்டு புகார்களாவது வருகிறதாம். எனவே, சென்னை மக்கள்தான் லேட்டஸ்ட் மோசடிகள் குறித்து தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT